டில்லி:

கர்நாடகா தேர்தலுக்கு பா.ஜ.க ரூ. 6,500 கோடி செலவழித்தது என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஆனந்த்சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கர்நாடகாவில் ஜனநாயகத்தை பிளவுப்படுத்த பா.ஜ.க முயற்சி செய்தது. பா.ஜ.கவின் அடங்காத குணத்தால் தோல்வியை தழுவியது. தேர்தலில் பணத்தை செலவழித்து அதிகாரத்திற்கு வர துடித்தது.

இந்த தேர்தலுக்கு பா.ஜ.க ரூ. 6,500 கோடியை செலவு செய்தது. இந்தியாவில் அனைவருக்கும் தெரியும் எது பணக்கார கட்சி என்று. பாஜக நடந்து கொண்ட விதத்திற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார்.