அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று தொடங்கிய இந்த இரண்டு நாள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “மகாராஷ்டிரா தேர்தலில் மோசடி செய்து பாஜக வெற்றிபெற்றுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

‘உலகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலிருந்து வாக்குச் சீட்டுகளுக்கு மாறி வருகிறது, ஆனால் நாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம்’ என்று கார்கே கூறினார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக மோசடி மூலம் வெற்றி பெற்றதாக கூறிய அவர் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல நடத்துவதை ஆதரித்தார்.
மேலும், மோடி அரசாங்கம் முதலாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் அரசு சொத்துக்களை விற்று ஜனநாயகத்தை மெதுவாக அழிப்பதாகவும் கார்கே குற்றம் சாட்டினார்.