அஜித்தின் வேதாளம் சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த ரீமேக்கை மெஹர் ரமேஷ் இயக்க, சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘போலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

அனில் சுக்ரா – ராம்சரண் – ஏ.எம்.ரத்னம் மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க, சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் போலா ஷங்கர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் போலா ஷங்கர் திரைப்படத்தின் பட பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.

வேதாளம் படம் 2018 இல் வங்க மொழியில் சுல்தான் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. விரைவில் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.