இளம் பாடகர்களின் திறமைகளை வெளியுலகிற்கு சொல்லும் விதமாக, விஜய் தொலைக்காட்சியில் ‘சூப்பர் சிங்கர்’ எனும் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது நிகழ்ந்து வரும் சூப்பர் சிங்கரின் எட்டாவது சீசனின் நடுவர்களாக அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.பி சரண் மற்றும் உன்னிகிருஷ்ணன் செயல்பட்டு வருகின்றனர். அதில் பின்னணி பாடகர் பென்னி தயாளும் ஒருவர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பென்னியின் சமீபத்திய பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“நான் இனி சூப்பர் சிங்கர் 8-உடன் தொடர்புடைய எதையும் பதிவிட மாட்டேன். எல்லா வெறுப்பு செய்திகளையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. நீங்கள் காட்டிய அனைத்து அன்புக்கும் நன்றி. நான் மனிதனாக இருக்கிறேன். எல்லாத்தையும் முடித்து விட்டேன். நன்றி. அடுத்த சீசனில் உங்களை பார்க்க மாட்டேன்” என்று பதிவிட்டுள்ளார் .

சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியில் இருந்து ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் சமீபத்தில் எலிமினேட் ஆனார். இதன் விளைவாக இருக்குமோ என ரசிகர்கள் சந்தேகிக்கிறார்கள்.

கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து ஸ்ரீதர் சேனா வெளியேற்றப்பட்டார். அவரை விட பலவீனமான போட்டியாளர்கள் சூப்பர் சிங்கர் போட்டியில் இருக்கும் போது, ஜட்ஜ்கள் ஒருதலை பட்சமாக ஸ்ரீதரை நீக்கிவிட்டார்கள் என்று பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CSi5ncwIJ4v/