Bengaluru sees maximum housing sales in 2016 among 7 big cities

வீடுகள் விற்பனையில் நாட்டில் உள்ள 7 முக்கிய நகரங்களில் பெங்களூரு முன்னணியில் இருப்பதாக சிபிஆர்ஈ என்ற கட்டுமான தொழில்களின் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டை விட (25%), 2016ஆம் ஆம் ஆண்டு (27%) பெங்களூரு நகரின் வீடு விற்பனை 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரியல் எஸ்டேட் விற்பனையில் இதற்கு அடுத்த படியாக டெல்லி (NCR), கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் புனே நகரங்கள் உள்ளன.

நாட்டின் மொத்த ரியல் எஸ்டேட் வணிகத்தில் 50 சதவீத பங்கை பெங்களூரு, ஹைதராபாத், சென்னை ஆகிய 3 நகரங்கள் மட்டும் ஆக்கிரமித்திருப்பதாக சிபிஆர்ஈ நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

பெங்களூருவில் வீடு  விற்பனை குறுகிய காலத்தில் இரு மடங்காக அதிகரித்திருப்பதாகவும் சிபிஆர்ஈ நிறுவனம் தெரிவித்துள்ளது.