இந்தியாவுக்கு எதிராக மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாட இலங்கை அணி இந்தியா வரவுள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள் சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் முதல் முறையாக இந்திய அணிக்காக விளையாட உள்ளனர்.

ஒரு நாள் போட்டிகளில் கே.எல். ராகுல்-க்கு பதில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியா டி-20 அணியின் கேப்டனாகவும் இருப்பார், ஒருநாள் அணிக்கான கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் சிவம் மாவி 19 வயதுக்கு குறைந்தவர்களுக்கான உலக கோப்பை அணியில் 2018 ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2018 முதல் விளையாடி வந்த சிவம் மாவி சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் 2023 ம் ஆண்டு ஐபிஎல்-லில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணிக்காக விளையாட 6 கோடி ரூபாய்க்கு தேர்வாகி உள்ளார்.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் வங்காளத்தைச் சேர்ந்தவர். 2023 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக 5.5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இவர் இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாட உள்ளார்.

டி20 தொடரின் முதல் போட்டி மும்பையில் ஜனவரி 3ம் தேதியும், 2வது போட்டி புனேயில் 5ம் தேதியும், 3வது போட்டி ராஜ்கோட்டில் 7ம் தேதியும் நடக்கிறது.

இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணி :

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரிதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷரண். படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.

ஒருநாள் போட்டி தொடர் கௌகாத்தி-யில் ஜனவரி 10ம் தேதியும், கொல்கத்தா-வில் 12ம் தேதியும், திருவனந்தபுரத்தில் 15ம் தேதியும் நடைபெற உள்ளது.

இலங்கை தொடருக்கான இந்திய ஒருநாள் போட்டி அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கே.), இஷான் கிஷன் (வி.கே.), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

[youtube-feed feed=1]