டெல்லி: கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா 4ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊக்கமருந்து விதியை மீறியதற்காக பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் (நாடா அமைப்பு) 4 ஆண்டு இடைநீக்கம் செய்து அறிவித்து உள்ளது.
இதையடுத்து, பஜ்ரங் புனியா வெளிநாடுகளில் பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா ஊக்கமருந்து பரிசோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காத புகாரில் 4 ஆண்டுகள் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தடை விதித்துள்ளது. முன்னதாக இந்த விவகாரத்தில் கடந்த மார்ச் மாதம் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பின்னர் மேல்முறையீட்டு மனுவில் தடை நீக்கப்பட்டது.
இந்த நிலையில், ஊக்கமருந்து பரிசோதனைக்கு அவர் மாதிரிகளை வழங்காத குற்றச்சாட்டின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளதாக 4 ஆண்டகள் இடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக நாடா விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாவின் தடை உத்தரவை எதிர்த்து ஊக்கமருந்து எதிர்ப்பு மேல்முறையீட்டு குழுவை அவர் அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய பாஜ அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து இருவரும் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி பதவி வழங்கி கவுரவத்தது. வினேஷ் போகத் அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தலில் போட்டி: இன்று காங்கிரஸ் கட்சியில் சேருகிறார்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா…