இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் இதுவரை எந்தவொரு பிரதமரும். ஆட்சி காலமான 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய இயலாத சூழ்நிலையே உருவாகி உள்ளது.
1947ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் நாட்டில், இதுவரை எந்த வொரு கட்சியும், ஆட்சியும் 5 ஆண்டுகள் ஆட்சி பதவியை நிறைவேற்ற இயலவில்லை. தற்போது 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் நவாஸ் ஷெரிப்பும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை பாகிஸ்தானுக்கு 27 பிரதமர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர்கூட தனது பதவி காலத்தை முழுமையாக அனுபவிக்கவில்லை என்பது… பாகிஸ்தானின் பரிதாபம்.
இது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு போலும்….
பனாமா பேப்பர் ஊழல் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபை, அந்நாட்டு உச்ச நிதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவருக்கு பதிலாக அவரது தம்பி ஷாபாஸ் ஷெரிப் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று செய்திகள் வருகின்றன.
நவாஸ் ஷெரிப் பதவி நீக்கம் செய்யப்பட்டது, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை பாகிஸ்தான் அரசில் 4 முறை பிரதமராக பதவி ஏற்றுள்ள நவாஸ் ஷெரிப் ஒருமுறை கூட தனது பதவி காலமான 5 ஆண்டுகள்எ முழுமையாக ஆட்சி செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
தற்போதும் 4 ஆண்டுகளை கடந்த நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது நவாஸ் ஷெரிப்புக்கு மட்டுமல்ல.. பாகிஸ்தானுக்கு உள்ள சாபக்கேடு போலும்…
இந்தியாவில் இருந்து தனிநாடாக பிரிந்து சென்ற பாகிஸ்தானில் எந்தவொரு பிரதமரும் இதுவரை தனது பதவி காலமான 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்யவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது பாகிஸ்தான் பிரதம மந்திரிகளின் ஆட்சி காலம் விவரம்:
1. லியாகத் அலி கான் ( Liaquat Ali Khan) 14 ஆகஸ்ட் 1947 – 16 அக்டோபர் 1951
2. கவாஜா நசிமுத்தீன் (Khawaja Nazimuddin) 17 அக்டோபர் 1951 -17 ஏப்ரல் 1953
3. முகமது அலி போக்ரா (Muhammad Ali Bogra) 17 ஏப்ரல் 1953 _ 12 ஏப்ரல் 1955
4. சவுத்ரி முகமது அலி (Chaudhry Muhammad Ali) 12 ஆகஸ்ட் 1955 – 12 செப் 1956
5. ஹுசைன் சஹீத் சுரதி (Huseyn Shaheed Suhrawardy) 12 செப் 1956 – 17அக்1957
6. இப்ராகிம் இசுமாயில் சத்ரிகர் (Ismail Chundrigar) 17 அக் 1957 -16 டிச 1957
7. பெரோஷ் கான் நூன் (Feroz Khan Noon) 16 டிசம்பர் 1957 -7 அக்டோபர் 1958
8. நூருல் அமின் (Nurul Amin) 7 டிசம்பர் 1971 – 20 டிசம்பர் 1971
9. சுல்பிக்கார் அலி பூட்டோ (Zulfikar Ali Bhutto) ஆகஸ்ட் 14, 1973 – ஜூலை 5, 1977
10. முகமது கான் ஜுனேஜோ (Muhammad Khan Junejo) 24 மார்ச் 1985 – 29 மே 1988
11. பெனசீர் பூட்டோ (Benazir Bhutto) 2 டிசம்பர் 1988 -6 ஆகஸ்ட் 1990
12. குலாம் ஜாட்டோய் (Ghulam Mustafa Jatoi) 6 ஆகஸ்ட் 1990 – 6 நவம்பர் 1990 இடைக்கால பிரதமர்
13. நவாஸ் ஷெரீப் (Nawaz Sharif) நவம்பர் 6, 1990 – ஏப்ரல் 18, 1993
14. பலாக் மசாரி (Balakh Sher Mazari) 18 ஏப்ரல் 1993 -26 மே 1993 இடைக்கால பிரதமர்
15. நவாஸ் ஷெரீப்‘ (Nawaz Sharif) 26 மே 1993 -18 ஜூலை 1993
16. மொயுனுதின் அகமது குரெசி (Moeenuddin Ahmad Qureshi) 18 ஜூலை 1993 – 19 அக்டோபர் 1993
இடைக்கால பிரதமர்
17. பெனசீர் பூட்டோ (Benazir Bhutto) 19 அக்டோபர் 1993 -5 நவம்பர் 1996
18. மலீக் காலிட் (Malik Meraj Khalid) 5 நவம்பர் 1996 -17 பெப்ரவரி 1997 இடைக்கால பிரதமர்
19. நவாஸ் ஷெரீப் (Nawaz Sharif) 17 பெப்ரவரி 1997 – 12 அக்டோபர் 1999
20. ஜபருல்லுல்லா கான் ஜமாலி (Zafarullah Khan Jamali) 21 நவம்பர் 2002-26 ஜூன் 2004
21. சவுத்ரி சுஜாட் ஹுசைன் (Chaudhry Shujaat Hussain) 30 ஜூன் 2004 -20 ஆகஸ்ட் 2004
22. சௌகாட் அஜிஜ் (Shaukat Aziz) 20 ஆகஸ்ட் 2004-16 நவம்பர் 2007
23. முகமது மியான் சூம்ரோ (Muhammad Mian Soomro) 16 நவம்பர் 2007-25 மார்ச் 2008
24. யூசஃப் ரசா கிலானி (Yousaf Raza Gillani) மார்ச் 25 2008 – சூன் 19 2012
25. ராஜா பெர்வேஸ் அசரஃப் (Raja Pervaiz Ashraf) 22 ஜூன் 2012 -25 மார்ச் 2013
26. மீர் கசார் கான் கோசோ (Mir Hazar Khan Khoso) 25 மார்ச் 2013 -5 ஜூன் 2013 -இடைக்கால பிரதமர்
27. நவாஸ் ஷெரீப் (Nawaz Sharif) 5 ஜூன் 2013 முதல் ஜூலை 28, 2017