டெல்லி: மத்திய மின்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பால் நாடு முழுவதும் மின்கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எரி பொருட்களின் விலையைப்போல, மின்கட்டணமும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களின் தலையில் விழுந்த பேரிடியாக கருதப்படுகிறது.

ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வு காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தினசரி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தற்போது வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகி வருகிறது. இந்த நிலையில், சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை உயரும் வகையில், Automatic Pass-through Model வழிமுறையை மத்திய மின் துறை வெளியிட்டுள்ளது. இதனால், இனிமேல் மின்கட்டணமும் அதிகரிக்கும் சென்று கூறப்படுகிறது. ஏற்கனவே பணவீக்கத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் பொதுமக்களின் தலையில் இந்த அறிவிப்பு பேரிடியாக இறங்கி உள்ளது.

நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களும், மின் விநியோக நிறுவனங்களும் (Discom) பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. நிலக்கரியே நமது நாட்டின் முக்கிய ஆற்றல் ஆதாரமாக உள்ளது. இந்தியா நிலக்கரியை பெரிய அளவில் இறக்குமதி செய்துவரும் சூழ்நிலையில், நிலக்கரி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் Automatic Pass-through Model வழிமுறையை மத்திய மின் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, எதிர்கால ஒப்பந்தத்திற்குப் பிறகு எரிபொருள் விலை அதிகரித்தால், அரசாங்க டிஸ்காம்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். ஒப்பந்தத்தை விட மின் உற்பத்தி நிலையங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். எரிபொருள் விலை அதிகரிக்கும் போது, டிஸ்காம்கள் மின் உற்பத்தியாளர்களுக்கு அதிக கட்டணம் செலுத்தி மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும், இந்த நடவடிக்கையால்,மின் விநியோக நிறுவனங்களின் அதாவது டிஸ்காம்களின் நிதி நிலையும் மோசமடையலாம். இதை தடுக்க மின்சார கட்டணத்திற்கான விலை உயர்த்தப்படும் வாய்ப்பு உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது மோடி தலைமையிலான மத்தியஅரசுக்கு மேலும் பின்னடவை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.