சென்னை: சென்னை நந்தனம்  மெட்ரோ ரயில் நுழைவாயில் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளைச் சுலபமாக்குவதற்கு, நந்தனம் மெட்ரோ நிலையத்தில் உள்ள தற்போதைய B4 நுழைவாயிலை மூடுவது அவசியமாகும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நந்தனம் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் காரணமாக, நந்தனம் மெட்ரோ நிலையத்தின் B4 நுழைவுவாயில் (BSNL அலுவலகம் நோக்கி செல்லும் வழி), வரும் மார்ச் 23, 2026 முதல் நிரந்தரமாக மூடப்படுப்படுகிறது என்பதை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பொதுமக்களுக்கும், மெட்ரோ பயணிகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறது. பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிட்டு, அருகிலுள்ள மாற்று நுழைவாயில்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

B4 நுழைவாயிலின் அதே திசையில் அமைந்துள்ள A2 மற்றும் A3 நுழைவாயில்கள், எதிர்புறத்தில் அமைந்துள்ள B1, B2, மற்றும் B3 நுழைவாயில்கள்; இந்த நுழைவாயில்கள் அனைத்தும் அண்ணா சாலையிலேயே அமைந்துள்ளன. இவை முழுமையாகச் செயல்படுவதால், பயணிகள் எந்தவொரு சிரமமுமின்றி இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயணிகள் எளிதாகச் செல்வதை உறுதி செய்வதற்காக, மெட்ரோ ரயில் நிலைய வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களிலும் போதுமான வழிகாட்டிப் பலகைகள் மற்றும் அடையாளப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், பயணிகள் உதவிக்கு நிலைய பணியாளர்களை அணுகலாம்.பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை வழங்கவும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. இதனால் ஏற்படும் அசௌகரியத்திற்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வருந்துகிறது மற்றும் பயணிகளின் தொடர்ந்த ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறது என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உதவிமையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது https://chennaimetrorail.org/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

[youtube-feed feed=1]