ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, ராணுவ தலைமை அதிகாரிகள் உள்ளிட்டோர் கல்லானது கொண்ட இந்த கூட்டத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கான தாக்குதல்களின் வகை, இலக்கு மற்றும் நேரத்தை தீர்மானிக்க ஆயுதப்படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரம் உள்ளது என்று பிரதமர் மோடி ராணுவத் தலைவர்களிடம் தெரிவித்தார்.
ஆயுதப்படைகளின் திறன்களில் முழுமையான நம்பிக்கையை மோடி வெளிப்படுத்தியதாகவும், பயங்கரவாதத்திற்கு கடுமையான அடி கொடுப்பது என்பது ஒரு தேசிய தீர்மானம் என்று பிரதமர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெற்ற YUGM மாநாட்டில் பேசிய பிரதமர், “நேரம் கடந்து கொண்டிருக்கிறது” என்றார். “இலக்கு பெரியது,” என்று அவர் கூறினார். பின்னர் அவர் தற்போதைய சூழ்நிலையைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
“வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய அடுத்த 25 ஆண்டுகளுக்கான காலக்கெடுவை நாங்கள் நிர்ணயித்துள்ளோம்.” நமக்குக் குறைந்த நேரமே உள்ளது; “இலக்குகள் பெரியவை,” என்று அவர் குறிப்பிட்டார்.
[youtube-feed feed=1]