சென்னை:
கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்து வருவதன் காரணமாக சுகாதாரத்துறை தக்க கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு தற்போது தடுப்பூசி வழங்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் சங்கிலியை உடைப்பதற்க்கு ஒரே வழி தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் கொரோனா பாதிப்புகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கபட்ட நிலையில் தற்போது 37 மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.