போன் பயனர்கள் 5ஜி தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தும் வகையில், புதிய ஐஓஎஸ்-ஐ ஆப்பிள் நிறுவனம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஐஓஎஸ் 16.2 என்ற வெர்சன் சாப்டர்வேட் அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. 5ஜி சேவையை பெறுவதற்கு நம்மிடம் 5ஜி சேவையை சப்போர்ட் செய்யக்கூடிய ஸ்மார்ட்போன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் யூசர்கள் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும் அதில் 5ஜி வசதியை பயன்படுத்தக்கூடிய சாஃப்ட்வேர் வெர்ஷன்களை, அந்தந்த நிறுவனங்கள் இன்னும் முழுமையாக தயாரித்து வெளியிடவில்லை. எனவே பல மக்கள் 5ஜி போன்கள் வைத்திருந்தாலும் இன்னும் 5ஜி சேவைகளை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தில்  5ஜி தொழில்நுட்பத்தில் வேகமாக இயங்கக்கூடிய புதிய ரக ஐபோன், எஸ்.இ, எம்-1 சிப் கொண்ட புதிய ஐபேட் ஏர் உள்ளிட்ட போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல,  2 மடங்கு அதிக வேகத்தில் இயங்கக்கூடிய இந்த ஐபோன்களில், அதிக ஆற்றல் கொண்ட எம்-1 வகை சிப் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய பிராசஸரையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 5ஜி தொழில்நுட்பம், வேகமாக செயலாற்றும் திறன் கொண்ட ஏ15 பயோனிக் சிப்செட் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்தும் யூசர்களில், ஐஓஎஸ் பீட்டா வெர்ஷன் பயன்படுத்தும் நபர்களுக்கு ஏர்டெல் 5ஜி மற்றும் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பபட்டு வருகின்றன.

5ஜி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்திய அரசாங்கம் அந்தந்த மொபைல் நிறுவனங்களிடம் 5ஜி சேவையில் சப்போர்ட் செய்யும் சாஃப்ட்வேர் அப்டேட்டுகளை விரைவாக தயாரிக்கும் படி உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஆப்பிள் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷனில் வெளியாக போகும் 5ஜி சேவை சோதனை முறையில் வெளியிடப்பட்டது. அதன்படி ஏற்கனவே பீட்டா வெர்சன் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, ஆப்பிள்  நிறுவனம்,  சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் மொபைல் நெட்வொர்க் ப்ரொவைடர்களுடன் சேர்ந்து 5ஜி சேவையை விரைவில் அறிமுகப்படுத்த பாடுபட்டு வருவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. “நெட்வொர்க்கிற்கான தரம் மற்றும் செயல் திறன் ஆகியவற்றின் சோதனை முடிந்த பிறகு 5ஜி பயன்பாட்டிற்கு வரும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள ஐபோன் பயனர்கள் தங்களது, மொபைல் போனில் 5ஜி தொழில்நுட்பத்தைர பயன்படுத்தும் வகையில், ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 16.2 (IOS 16.2) சாப்ட்வேர் அப்டேட் (Software Update)  வேளியிட்டுள்ளது.

இதன் காரணமாக,  ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தும் ஐபோன் யூஸர்கள்,  புதிய அப்டேட்டிற்கு பிறகு தங்களது மொபைலில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம்.

உலகம் முழுவதும் பரவலாக 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வருவதற்கு முன் சோதனை அடிப்படையில் 5ஜி சேவை பீட்டா வெர்ஷன்  வெளியிடப்பட்டதில் உள்ள சில பிரச்சினைகள் தொடர்பான தரவுகளின் அடிப்படையில் சாப்ட்வேரில் சில திருத்தங்களை செய்து, தற்போது புதிய அட்டேட்டை  உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

[youtube-feed feed=1]