நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி கிரீஷ்ணா ரெட்டி தயாரிக்கவுள்ளார்.

நடிகை அனுஷ்காவின் பிறந்த நாளான இன்று (நவம்பர் 7ஆம் தேதி) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தை பிரபல இயக்குனர் மகேஷ் பாபு.P இயக்குகிறார். அனுஷ்காவின் 48-வது திரைப்படமான இந்த புதிய திரைப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.