சென்னை

பாஜக தமிழக முன்னாள் தலைவ்ர் அண்ணாமலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ந்டக்கும் என தெரிவித்துள்ளார்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அந்த கூட்டணியை உறுதி செய்ததுடன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றார். இது பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இதற்கு விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும் என்றார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று கூறியிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த பதில் கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று சென்னையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம்

“தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடைபெறும் என்று மிகத்தெளிவாக அமித்ஷா கூறிவிட்டார். அவரது கருத்தையே நான் பேசுகிறேன். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறும் என அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம். எனது தலைவர்களின் நிலைப்பாடு மாறும்வரை நானும் நிலைப்பாட்டை மாற்ற மாட்டேன்.

அதிமுகவுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அதிமுகவினர் அமித்ஷாவுடன் பேசட்டும். கூட்டணி ஆட்சி கருத்தை தேர்தல் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றெல்லாம் இருக்க முடியாது. கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா தொடர்ந்து தெளிவாக கூறுவதால் நானும் அதையே கூறுகிறேன்.

பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி ஆட்சி குறித்து பேச தொடங்கி விட்டன. தனது கட்சி அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்றே ஒவ்வொரு தொண்டனும் நினைப்பான். அதிமுக – பாஜக கூட்டணி உருவானதில் எனது பங்கு எதுவும் இல்லை. நான் ஒரு தொண்டன்.”

என்று கூறியுள்ளார்