சென்னை

பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் தனது படிப்பை முடித்து விட்டு வரும் 28 ஆம் தேதி தமிழ்கம் திரும்பி வர உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிக்க லண்டன் புறப்பட்டு சென்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அண்ணாமலை கலந்து கொண்டு வருகிறார். பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றதால், பாஜக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வழிநடத்த ஒருங்கிணைப்பு குழு ஒன்றை பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் நியமித்து அறிவிப்பு வெளியிட்டார்.

லண்டன் சென்றுள்ள அண்ணாமலை, அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ஆம் தேதி தமிழகம் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை, டிசம்பர் 1-ம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். பிறகு, தொடர்ச்சியாக கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்.

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், பாஜகவின் ஓட்டு வங்கியை மேலும் பலப்படுத்த, கடந்த மக்களவைத் தேர்தலின் போது நடத்திய ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை போல, ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு கிராம மக்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக பாஜக வட்டாரம் கூறுகிறது.