சென்னை: பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. செமஸ்டர் தேர்வுகள் எழுத்து தேர்வாகவே, தேர்வு மையங்களில் மட்டுமே நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து, கல்வி நிலையங்களில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும்  நேரடி வகுப்புகளும்  நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில்,  கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் ம் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கி  நடைபெறும் என்றும், தேர்வுமையங்களில் நேரடியாக எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு கல்லூரிமாணவர்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தது – போராட்டங்களும் நடைபெற்றது.

இதையடுத்து, செமஸ்டர் தேர்வை ஒத்தி வைத்த தமிழகஅரசு, இனிமேல் ஆன்லைனில்  தேர்வு கிடையாது, நேரடியாக தேர்வு மையங்களில்தான் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்து, மாணாக்கர்களுக்கு கால அவகாசம் வழங்கியது.

இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தொடங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி செமஸ்டர் தேர்வுகள் எழுத்து தேர்வாகவே, தேர்வு மையங்களில் மட்டுமே நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கு ஜனவரி 21ம் தேதி முதல் நேரடி தேர்வுகள்  நடைபெறுகிறது.

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்  மாணவர்களுக்கு ஜனவரி 21 முதல் மார்ச் 2 வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் .

எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்க்., மாணவர்களுக்கு ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும்.

இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிவக்கப்பட்டு உள்ளது.