கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறி 3 பக்க அறிக்கை வெளியிட்டார் ரஜினிகாந்த்.
மேலும் கொரோனா உருமாறி புதுவடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருப்பதையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல் தொற்று பரவலுக்கு தேர்தல் ஆணையம் காரணமாக இருந்ததாக உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
இப்போது நீதிமன்றம் கூறும் காரணத்தை முன்கூட்டியே கணித்ததாக ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.