சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பாலிவுட்டில் நிலவும் நெபோடிஸம் தான் காரணம் என சமூக வலைதளத்தில் சர்ச்சை கிளம்பி உள்ள நிலையில் , கமலுக்கும் அதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
மருத்துவராக அமிதாப் பச்சனும், நோயாளியாக கமல்ஹாசனும் நடித்து வந்த கபார்தார் படம் பாதியிலேயே நின்று போக அமிதாப் பச்சன் தான் காரணம் என இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் பேசிய பழைய பேட்டியில் உள்ள தகவல் தற்போது அசுர வேகத்தில் பரவி வருகிறது.
தனக்கு இந்த படத்தால் எந்த ஒரு பெயரோ, ஆதாயமோ கிடையாது என அமிதாப் பச்சன் அந்த படத்தை விட்டு விலகியாதாக பாக்யராஜ் சொன்ன தகவல் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.