சான் ஃபிரான்சிஸ்கோ
இளைஞர்களிடையே முகநூல் தற்போது மதிப்பிழந்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
உலக அளவில் சமூக தளங்களில் ஃபேஸ்புக் எனப்படும் முகநூல் மிகவும் புகழுடன் விளங்குகிறது. இந்த தளத்தை தற்போது 220 கோடி பேருக்கு மேல் உபயோகித்து வருகின்றனர். அந்த உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை குறித்து அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப் பட்டது. சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த பியூ ஆய்வு மையம் நடத்திய அந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது.
”அமெரிக்க இளைஞர்கள் இடையே தற்போது முகநூலை விட இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்ற தளங்கள் அதிகம் பிரபலமாக உள்ளது. அமெரிக்க இளைஞர்களில் முகநூல் உபயோகிப்பாளர்கள் குறைந்து வருகின்றனர். கடந்த 2015ஆம் வருடம் எடுத்த ஆய்வின்படி இளைஞர்களில் சுமார் 71% பேர் முகநூல் உபயோகித்து வந்தனர். தற்போது அது 51% ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஸ்னாப் சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இளைஞர்களில் சுமார் 10% முகநூல் மட்டுமே உபயோகித்து வருவது குறிப்பிடத்தக்கது”
இவ்வாறு அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.