டென்வர், அமெரிக்கா

னுமதி பெறாமல் ஆப்பிள் எடுத்து வந்த  அமெரிக்க பெண் விமானப் பயணிக்கு அமெரிக்க சுங்கத் துறை $500 அபராதம் விதித்துள்ளது.

அமெரிக்காவின் டென்வர் பகுத்யைச் சேர்ந்த பெண் கிரிஸ்டல் டெட்லாக்.   இவர் பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப் பயணம் சென்று வந்தார்.  அவர் திரும்பும் போது டெல்டா ஏர் லைன்ஸ் விமானத்தில் அவருக்கு ஒரு ஆப்பிள் பழம் தரப்பட்டுள்ளது.   அதை அவர் உண்ணாமல் தனது கைப்பையில் வைத்துள்ளார்.

அதன் பிறகு அவர் டென்வர் விமான நிலையத்தில் இறங்கிய போது சுங்கத் துறை அதிகாரிகள் வழக்கம் போல கைப்பைகளை சோதனை இட்டுள்ளனர்.   அப்போது அந்த ஆப்பிள் பழம் சிக்கி உள்ளது.   அவர் அதை விமானத்தில் சொல்லாமல் எடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.   விமான விதிகளின் படி தின்பண்டங்கள் உட்பட எந்தப் பொருளையும் சொல்லாமல் எடுத்து வருவது குற்றமாகும்

ஆனால் டெட்லாக் தனக்கு அது விமானத்தில் இலவசமாக கொடுக்கப்பட்ட பழம் என வாதாடினார்.    அதற்கு சுங்கத் ஹ்டுறை அதிகாரி அவரிடம் “உங்கள் பிரான்ஸ் சுற்றுப்பயணத்துக்கு நீங்கள் மிகவும் செலவழித்தீர்களா?” எனக் கேட்டுள்ளார்.  அதற்கு டெட்லாக் ஆம் எனக் கூறவும், “செலவோடு செலவாக $500 டாலர் அபராதமும் செலுத்தி விடுங்கள்”  எனக் கூறி அபராதம் விதித்துள்ளார்.