சென்னை: வேலூர் மேற்கு மாவட்டம், ஆம்பூர் நகரச் செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

திமுகவின் வேலூர் மேற்கு மாவட்டம், ஆம்பூர் நகரச் செயலாளர் எம்.ஆர். ஆறுமுகம் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதால் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவருடன் கட்சி நிர்வாகிகள் தொடர்பு கொள்வதை தவிர்த்துவந்தனர்.

இதையடுத்து, தனது செயலுக்கு ஆறுமுகம் வருத்தம் தெரிவித்ததுடன், மீண்டும் கழகப்பணியாற்ற அனுமதிக்கோரி கழகத்ததலைவரிடம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று, அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும், இன்றுமுதல் ஆம்பு நகர செயலாளராக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார் என  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.