மும்பை
மகாராஷ்டிராவில் பாஜக மீது கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன.
இந்தியாவில் அதிக அளவில் மக்களவை தொகுதிகள் உள்ள மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது. இந்த மாநிலத்துக்கு அடுத்ததாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக, 35 இடங்கள் வரை போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.
இதையொட்டி மும்பை சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதிப் பங்கீடு குறித்து சிவசேனா தலைவரான முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவரான துணை முதல்வர் அஜித்பவார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
அந்த பேச்சுவார்த்தையின் சிவசேனாவுக்கு 8 தொகுதிகளையும், அஜித்பவார் தேசியவாத காங்கிரசுக்கு 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
எனவே சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கிடையே அறிக்கை போர் நடந்து வருவது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.