’பிரம்மஸ்த்ரா’ படம் துவக்கத்திலிருந்தே ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் காதலித்து வருகின்றனர் என்ற செய்தி டாக் ஆஃப் த டவுனாக இருந்தது.

இந்நிலையில் 64வது ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதில் ஆலியா ராஸி படத்தின் சிறந்த நடிக்கைக்கான விருது பெற்றார்.

அந்த விருதை பெரும் பொழுது ஆலியா ஐ லவ் யூ ரன்பீர்” என சொல்ல , அந்த நொடி அனைத்து கேமராக்களும் ரன்பீரை நோக்கி திரும்பிய போது வெட்கத்தில் கையால் கண்ணை மூடி கீழே குனிந்து சிரித்த காட்சி இருவருக்குமிடையேயான காதலை ஊர்ஜிதமாக்கியது. ரசிகர்களும் உற்சாகத்தில் கூச்சலிட்டு விசிலடித்தனர்.