கொரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்த முடியாமல் இந்தியா.. அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் திணறிக்கொண்டு இன்னமும் மக்கள் மீது பழிபோட்டு ஊரடங்கு என்ற பெயரில் வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கிறது. சினிமா தியேட்டர்களை மூடிவிட்டு ஒடி டி தளத் துக்கு ஆதரவு தருவதுபோல அரசுகளின் செயல்பட்டுகள் உள்ளதாக திரையுலகில் முணுமுணுப்பு எழுந்திருக்கிறது.
ஆனால் துபாய், மலேசியா, ஆஸ்திரே லியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிஜி ஆகிய நாடுகள் கொரோனாவுக்கு குட்டு வைத்து கட்டுக்குள் கொண்டு வந்திருக் கிறது. அந்நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.இந்த நாடுகளில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட் டுள்ளன.
தல அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ஜெயம் ரவியின் கோமலி ஆகியவை படங்கள் மலேசிய திரையரங்குகளில் ஜூலை 9 ஆம் தேதி அதாவது நாளை மீண்டும் வெளி யிடப்படுகிறது. மலேசியா முழுவதும் உள்ள லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் (எல்எஃப்எஸ்) சினிமா திரைகள் விஸ்வாசம் மற்றும் கோமலி ஆகியவற் றை இலவசமாக திரையிட ஏற்பாடு செய்துள்ளன.
லோட்டஸ் ஃபைவ் ஸ்டாரின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இது தெரிவிக் கப்பட்டிருகிறது.
இதுபற்றி டிவிட்டரில் “லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் இலவச ஸ்கிரீனிங் மூலம் திரைப் படங்களை மீண்டும் திரையிடப் படுகிறது, மீண்டும் தல அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ஜெயம் ரவியின் கோமாலி ரசிகர்களை கொண்டாடத்தில் ஆழ்த்த வருகின்றன ” என தெரிவிக்கப் பட்டிருக்கிறது.