2022 ம் ஆண்டு பொங்கலன்று ரிலீசுக்கு காத்திருக்கும் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகியிருக்கிறது.

‘வலிமை’ மேக்கிங் வீடியோவில் மாஸான பைக் ஸ்டண்ட் காட்சி இடம்பெற்றுள்ளது.

ஸ்டண்ட் காட்சியில் வீலிங் செய்யும்போது நிலைதடுமாறி விழுந்த அஜித் அட்டகாசமாக எழுந்து பின்னர் அமர்க்களமாக வீலிங் செய்து அசத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது.

 

அஜித் நிலை தடுமாறி விழுவதை காண்பித்துள்ள இந்த மேக்கிங் வீடியோவில் உத்வேகமூட்டும் மகாத்மா காந்தியின் வரிகளை பதிவிட்டு ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.