ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் அஜித் கலந்துகொண்டார்.
தற்போது, இதுவரை படமாக்கப்பட்ட அனைத்துக் காட்சிகளின் எடிட்டிங் பணிகளையும் முடித்துவிட்டது படக்குழு.
அடுத்த 3 மாதங்களில் இறுதிக்கட்டப் பணிகளை முடித்துக் கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என முடிவு செய்துள்ளனர். இதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் ஒருபுறம் படப்பிடிப்பு, மறுபுறம் இறுதிக்கட்டப் பணிகள் எனத் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது படக்குழு.