நடிகர் அஜித், ஷாலினி தம்பதியினருக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். நடிகர் அஜித் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.

தீபாவளியன்று ஷாலினி மற்றும் நண்பர்களுடன் அஜித் எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன.

இந்நிலையில் தல அஜித்தின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இன்று வெளியானது. அதில், “ஏழை, நடுத்தரம் மற்றும் பணக்காரன் என்பது பொருளாதார நிலையை தான் குறிக்குமே தவிர அவர்களின் குணாதிசயங்களை அல்ல. நல்ல மற்றும் கெட்ட மனிதர்கள் சமூகத்தின் அனைத்து வட்டாரங்களிலும் இருக்கிறார்கள்.

வெறும் ஒருவரின் பொருளாதார நிலையை மட்டுமே வைத்து அவருடைய குணாதிசயங்களை முடிவு செய்வதை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அனைவரும் விழித்துக் கொள்ளுங்கள்” என ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார் தல அஜித்.

இதனை வலிமை திரைப்படத்தில் தல அஜித்துடன் இணைந்து பணியாற்றியுள்ள நடிகர் ராஜ் ஐயப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.