‘பாகுபலி’ படத்தை அடுத்து எஸ்.எஸ்.ராஜமவுலி டைரக்டு செய்த ஆர்.ஆர்.ஆர். படம் 2 ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்தது.

ஆந்திராவில் விடுதலை போராட்டத்துக்கு வித்திட்ட இரு போராளிகளை பற்றிய படம் இது.

ராம் சரணும், ஜுனியர் என்.டி.ஆரும், போராளிகளாக நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2 ஆம் தேதி அஜயின் பிறந்த நாள். அன்று அஜய் தேவ்கன் தொடர்பான போட்டோக்களை வெளியிட ராஜமவுலி முடிவு செய்துள்ளார்.

“ராஜமவுலி படத்தில் நடித்தது புதிய அனுபவம். எனக்காகவே இந்த படத்தில் ஒரு வேடத்தை உருவாகியுள்ளார், அவர்” என அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராம் சரணுக்கும், ஜுனியர் என்.டி.ஆருக்கும் போர் பயிறிசி அளிக்கும் ஆசிரியராக அஜய் நடித்துள்ளதாக தெரிகிறது.

– பா. பாரதி