டிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கனா உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கி றார். ’நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்திருந்தார், அது அவரை இளம் ரசிகர், ரசிகைகளிடம் கொண்டு சென்று சேர்த்திருக்கிறது.


திருப்பூரை சேர்ந்த ரசிகை ஒருவர், ’ஐஸ்வர்யா அக்கா உங்கள் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. நான் உங்களின் தீவிர ரசிகை உங்களுக்காக உயிரையும் கொடுப்பேன்’ என தெரிவித்திருக்கிறார்.
அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ,’உங்களை எனது தொழியாக ஏற்றுக்கொள்கிறேன். தன்னுடைய உயிரை வேறு யாருக்காகவும் ஒருபோதும் தரக் கூடாது. உங்களின் அன்புக்கு நன்றி. மீண்டும் அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். இது சத்தியம்’ என அட்வைஸ் செய்திருக்கிறார்.