சென்னை: ஐப்பசி மாத சுபமுகூர்த்த நாட்களையொட்டி, பத்திரப்பதிவுஅதிகம் இருக்கும் என்பதால்,  பதிவுக்காக கூடுதல் டோக்கன்களை வழங்க  சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுத்துறை தலைமை அலுவலகம் உத்தரவிட்டு உள்ளது.

இந்த தமிழ் மாதமான ஐப்பசி மாதத்தின்  சுபமுகூர்த்தம் நாட்களாக இன்றும் நாளையும் உள்ளது (நவ. 7, 8 தேதி)‘ சுபமுகூர்த்த நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவு  சார்பதிவாளர் அலுவலகங்களில்  நடைபெறும். இதனால், பொதுமக்களின் தேவைக்கேற்ப பத்திரப் பதிவுகளை செய்யும் வசதியாக கூடுதல் டோக்கன் வழங்க சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு உத்தரவிடபபட்டுள்ளது.

ஐப்பசி மாத சுபமுகூர்த்த நாட்களான நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் அதிக பத்திரப் பதிவுகள் எதிர்பார்க்கப்படுவதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், சொத்துக்கள், வீடுகள், மனைகளை வாங்கும்போது  நல்ல நாட்கள் அதாவது  சுபமுகூர்த்த நாளா என்று பார்த்து வாங்குவது வழக்கம்.  இதனால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்டம் அலைமோதும். கூட்ட நெரிசலை தவிர்க்க தற்போது சார்பதிவாளர் அலுவலகங்களில்  டோக்கன் முறை  வழங்கப்பட்டு, அதற்கான நேரம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, பொதுமக்கள் தாங்கள் விரும்பும் நாளில், விரும்பும் நேரத்தில் பதிவு மேற்கொள்ளும் வகையில் டோக்கன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனப்டி, ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் தினமும் 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.  அதுபோல,  2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகத்துக்கு 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த  நிலையில் ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.

தற்போது ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான நவம்பர் 07 மற்றும் 08 ஆகிய நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை ஏற்று ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான 07 மற்றும் 08 ஆகிய நாட்களில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.