லக்னோ: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட உள்ளதாக  அசாருதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி அறிவித்து உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  பிப்ரவரி 10-ம்தேதி முதல் மார்ச் 7-ம்தேதி வரை 7 கட்டங்களாக  வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுவதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற சமாஜ்வாதி ஒருபுறமும், காங்கிரஸ் கட்சி மற்றொருபுறமும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில்,  லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாருதீன் ஓவைசி உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத் திந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி கட்சி 100 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், உ.பி.யில்,  உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இடையே யார் இந்து என்பதில்தான் போட்டி நிலவுகிறது என்று விமர்சித்தவர், மதச்சார்பற்றவர்களாக தங்களை அறிவித்துக் கொள்பவர்களிடம் இஸ்லாமியர்களை வேட்பாளர்களாக நிறுத்த பிச்சை எடுக்க வேண்டியுள்ளது.   “இது சமூக நீதி பற்றியது அல்ல என்றும் கூறினார்.