சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் வழக்கமான நடைமுறைப்படி தொடங்கியதும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பட்ஜெட் தாக்கல் செய்ய சபாநாயகர் அப்பாவு அழைத்தார்.
இதற்கிடையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து ஏதோ பேச முயன்றார். அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் மீண்டும் சோதனை உள்பட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி அமளியில் ஈடுபட்டனர்,.
ஆனால், எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
அதைத்தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.