ஜீத்துடன் அசல், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், மாதவனுடன் வேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. இவர் 2 குழந்தைக்கு தாய் ஆகியிருக்கிறார். இன்னமும் தனது உடல் தோற்றத்தை கச்சிதமாக வைத்திருக்கிறார். அவரிடம் ஒரு ரசிகர், ‘ உங்கள் வயது என்ன?’ என்று கேட்டார், அதற்கு பதில் அளித்தார் சமீரா.


’நீங்கள் ஆண்களிடம் வயதை கேட்கலாம் பெண்களிடம் கேட்கக்கூடது. எனக்கு 41 வயது ஆகிறது. பெண்கள் எப்போதும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்கான அழுத்தம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. உங்கள் 30கள் அருமை. அப்போதே நீங்கள் உண்மையில் யார் என்பதைக் கண்டுபிடியுங் கள். 40 கள் என்பது ஒரு சுவையான ஒயின் போன்றவை ?? இந்த நிலையான வடிகால் களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இளமையான மனதை என்றைக்கும் வைத் திருக்க வேண்டும். அப்போது வயது என்பதும் ஒரு நம்பர்தான். உடல் எடை என்பதும் ஒரு நம்பர்தான்.. அச்சமின்றி இருங்கள் .. ” என ரஜினி பாணியில் தத்துவம் பேசி இருக்கிறார் சமீரா.

[youtube-feed feed=1]