கோவை:

டுத்த காரியத்தில் வெற்றியை பதிக்கும், நடிகர் அஜித்குமார், சமீபத்தில் அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்களுடன் இணைந்து டிரோன் (ஆளில்லா குட்டி விமானம்) தயாரித்து அசத்தி, உலக அளவில் பரிசு பெற்ற நிலையில், தற்போது, மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்து உள்ளார்.

கார் மற்றும் பைக் ரேஸ் பிரியரான நடிகர் அஜித், மாடலிங், போட்டோகிராபி  என அசத்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக டிரோன்ஸ் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் தயாரிப்பில் கவனம் செலுத்தினார்.

இதையடுத்து, துப்பாக்கி சுடுவதற்கும் பயிற்சி எடுத்து வந்தார். பல்வேறு படங்களில் படங்களில் டம்பி துப்பாக்கியைக்கொண்டு சுடுவதுபோல் நடித்து வந்த அஜித்துக்கு, அது போரடித்துவிட்ட நிலையில், உண்மையான துப்பாக்கியைக் கொண்டு சுடும் பயற்சி பெற்று வந்தார்.

இந்த நிலையில், தற்போது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.  கோயம்பத்தூரில் நடைபெற்று வரும் தமிழ்நாடு அளவிலான 45-வது துப்பாக்கிச் சூடு போட்டியில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.