சென்னை: நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான 19கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.7.50 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களாக சமையல் எரிவாயு விலையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாத நிலையில், 4 மாதங்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்தத. நேற்று (ஜூலை 31) நிலவரப்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டிற்காக சிலிண்டர்கள் விற்பனை விலை 1809.50 ஆக இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்டு 1ந்தேதி) வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் 1809.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர், இன்று (ஆக்.1) முதல் 1817 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி 818.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.