டில்லி

சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வந்தன. ஆயினும் சுமார் 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து வந்தது.

நேற்று பெட்ரோல், டீசல் விலையை மத்திய நேற்று அதிரடியாகக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.  அந்த அறிவிப்பின்படி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டது. மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் தனது எக்ஸ் தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

இதன்படி டில்லியில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.96.72 ஆக இருந்து இன்று முதல் ரூ.94.72 ஆக  விற்பனையாகிறது. டீசல் விலை ரூ.89.62-ல் இருந்து ரூ.87.62 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று ரூ.102.73 ஆக இருந்த பெட்ரோல் விலை இன்று ரூ.100.73 ஆகக் கு றைந்துள்ளது. டீசல் விலை ரூ.94.33-ல் இருந்து ரூ.92.33 ஆகக் குறைந்துள்ளது.