ஜலாலாபாத்:
ஆப்கானிஸ்தானில், சவ ஊர்வலத்தின்போது, மனித குண்டு வெடித்ததில், 15 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், நேற்று சவ ஊர்வலத்தின்போது தற்கொலை குண்டு வெடித்ததில் 15 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பெஹ்சுத் மாகாணத்தில் உள்ள இடுகாட்டை நோக்கி, சமீபத்தில் மரணமடைந்த ஹஸ்கா மினா மாகாண முன்னாள் கவர்னரின் உடலை அடக்கம் செய்ய, உறவினர்களும், நண்பர்களும் ஊர்வலமாக சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது மனித குண்டு வெடித்ததில் சவ ஊர்வலத்தில் வந்த 15 பேர் உயிரிழந்தனர்; மேலும் 13 காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை.