
காபூல்:
ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் மாவட்ட கவர்னர் உள்பட 15 பேர் பலியானதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சில ஆண்டுகளாக போர் நடை பெற்று வருகிறது.
இந்நிலையில், தென்கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள மாவட்ட கவர்னர் அலுவலகம் மீது தாக்குதல் நடைபெற்றது.
இந்த திடீர் தாக்குதலில் மாவட்ட கவர்னர் உள்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது.
மாவட்ட கவர்னர், புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி, காவல்துறை துணைத்தலைவர் உட்பட முக்கிய அதிகாரிகள் அப்போது ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தாகவும், அதை அறிந்த தலிபான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
[youtube-feed feed=1]