டெல்லி
பாஜகவின் முத்த தலைவர் எல்கே அத்வானி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்,
பாஜகவின் முத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானிக்கு கடந்த 12-ந்தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அவர் உடனடியாக சிகிச்சைக்காக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு பின்னர், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்ட அவர் ஓரிரு நாட்களில் அதில் இருந்து வெளியே கொண்டு வரப்படுவார் என்று முன்பு தெரிவிக்கப்பட்டது. அத்வானியின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் கண்ட நிலையில், மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
Advani, Hospital, Discharge,