ஸ்ரீஹரிகோட்டா: ஆதித்யா எல்.1 விண்கலம் இரண்டாவது ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக பயணித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்ய, கடந்த 2023ம் ஆண்டு செப்., 2ம் தேதி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள, எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் இந்தாண்டு (2024) ஜனவரியில் நிலை நிறுத்தப்பட்டது.
இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் ஹாலோ சுற்றுவட்டப் பாதையில் முதல் சுற்றை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இந்த சுற்றுவட்டப் பாதையை நிறைவு செய்ய 178 நாட்களை விண்கலம் எடுத்துக் கொண்டுள்ளதாகவும், தற்போது விண்கலம் இரண்டாவது ஹாலோ ஆர்பிட்டில் தனது பாதையை வெற்றிகரமாக மாற்றி சிறப்பாக பயணித்து வருவதாகவும் இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், ஆதித்யா-எல்1: முதல் சுற்றுப்பாதை நிறைவு கொண்டாட்டம் 🌞🛰️
இன்று, ஆதித்யா-எல்1 சூரியன்-பூமி எல்1 புள்ளியைச் சுற்றி அதன் முதல் ஒளிவட்டப் பாதையை நிறைவு செய்தது. ஜனவரி 6, 2024 அன்று அனுப்பப்பட்டது., ஒரு புரட்சியை முடிக்க 178 நாட்கள் ஆனது. இன்றைய ஸ்டேஷன் கீப்பிங் சூழ்ச்சி இரண்டாவது ஒளிவட்ட சுற்றுப்பாதையில் அதன் தடையற்ற மாற்றத்தை உறுதி செய்தது என குறிப்பிட்டுள்ளது.