தமிழில் 2007-ம் ஆண்டு ‘சிருங்காரம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘செக்கச்சிவந்த வானம்’ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே மணிரத்னம் படத்தில் நடித்ததுதான் தன் வாழ்க்கையையே மாற்றியது என்று அதிதி ராவ் பேட்டி அளித்துள்ளார்.
மணிரத்னம் பட ஹீரோயின் என்பது என் வாழ்நாள் கனவு. எனவே நான் அவரிடம் சென்று ‘சார், எனக்குத் தமிழ் தெரியாது. ஆனால் உங்கள் படத்தில் நடிப்பதுதான் என் கனவு. இப்போது நான் என்ன செய்யவேண்டும் என்று கூட எனக்குத் தெரியவில்லை’ என்று கூறிவிட்டேன்.
அப்போதுதான் எனக்குப் புரிந்தது, லொக்கேஷன், மேக்கப், வசனங்கள், எதுவுமே முக்கியமில்லை. நடிகர், இயக்குநர், கேமரா இது மூன்றும்தான். இயக்குநரிடமிருந்து நாம் உள்வாங்கிய விஷயங்களை வெளிப்படுத்தவேண்டும். அது நமக்குள் ஊடுருவி வெளியேற வேண்டும். அதை மேக்கப் போட்டு எல்லாம் மறைக்க முடியாது”

[youtube-feed feed=1]