டெல்லி: ஹிண்டன்பெர்க் அறிக்கையைத் தொடர்ந்து,  அதானியின் குழும பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த நாட்களில் சுமார் ரூ.50ஆயிரம் கோடி அளவுக்கு எல்ஐசிக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது அதானி குழுமத்தின் பங்குகள்.  அவரும் உலக பணக்காரர் பட்டியலில் 25வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரது பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன.

இதற்கிடையில், 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி, அதானி நிறுவனத்தில் முதலீடு செய்ததது. இதுவரை அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனப் பங்குகளை எல்ஐசி நிறுவனம் ரூ.30,127 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானியின் குழுமத்தில் உள்ள 7 நிறுவனங்களின் பங்குகளை எல்ஐசி 1.28 சதவிகிதம் முதல் 9.14 சதவிகிதம் வரை வாங்கியிருக்கிறது. அதானி போர்ட்ஸ் பங்குகளில் 9 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. இது ஜனவரியில் 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 11 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதுபோல அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 4.23 சதவிகிதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது.

அந்த காலக்கட்டத்தில் எல்ஐசியின் பங்குகள் ரூ.83,000 கோடியாக இருந்தது.  ஆனால், ஹிண்டன்பெர்க் அறிக்கையைத் தொடர்ந்து, பிப்ரவரி 23ந்தேதி 2022 நிலவரப்படி,  ரூ.33,000 கோடியாக சரிந்துள்ளது.   ஜனவரி 24ஆம் தேதி ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்ட போது, அதானி குழுமத்தில் எல்ஐசி மேற்கொண்டிருந்த முதலீட்டு மதிப்பானது ரூ.81,000 கோடியாக இருந்தது. ஆனால், தொடர் சரிவை சந்தித்து வரும் அதானி நிறுவனம்  கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  இதனால், அதானி குழுமத்தின் பங்குகளில், எல்ஐசியின் முதலீட்டு மதிப்பும் 25,500 கோடியிலிருந்து ரூ.5,200 கோடியாக சரிவடைந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் பங்குச் சந்தைகளில் அதானி குழும பங்குகள் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு சந்தை மூலதன மதிப்பு சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.