இந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்பட உள்ளதாம். 1950, 60-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம், பொம்மை கல்யாணம், மருதநாட்டு வீரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இந்தப் படத்தில், ஜமுனாவின் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
நடிகர்கள் என்.டி.ராமராவ், சஞ்சய்தத், நடிகை ஷகிலா ஆகியோரது வாழ்க்கை வரலாறும் படங்களாக வந்தன. தற்போது ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ பெயரில் படமாகியுள்ளது. நடிகைகள் சவுந்தர்யா, விஜய நிர்மலா ஆகியோரது வாழ்க்கையும் படமாக்கப்பட உள்ளது.
நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையில், பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்து தேசிய விருது பெற்றார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் நடித்த கீர்த்தி சுரேசுக்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.