தமிழில் வாஞ்சையர் உலகம். செவன் ஆகிய படங்களில் நடித்ததுடன், தெலுங் கில், உன்னது ஒக்டே ஜிந்தகி, கர்வ்வா, கோபாலா கோபாலா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அனிஷா அம்புரோஸ். இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் குணணாத் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் அனிஷா கர்ப்ப மானார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அவரை நேற்று மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிஷா வெளியிட்டிருக்கிறார். அவருக்கு திரையுலகினர். நண்பர்கள் வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர்.
அனிஷா வின் பெற்றோர் விசாகப்பட்டனதை சேர்ந்தவர்கள் ஆனாலும் அனிஷா ஒடிசா வில் வளர்ந்தார். ஆந்திராவிலும், ஒடிசா விலும் அவரது குடும்பத்தினருக்கு பள்ளி கள் உள்ளன. பின்னர் விசாகப்பட்டனம் வந்த அனிஷா அங்கு பள்ளிப் படிப்பை முடித்து பின்னர் இண்ட்ர்நேஷனல் பிஸ்னஸ் ஸ்கூலில் எம் பி ஏ முடித்தார். திருமணத்துக்கு பிறகு அனிஷா படங்க ளில் நடிப்பதை குறைத்துக்கொண்டிருக்கி றார்.