இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிர்காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. எஸ்.பி.பி. உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுவாசத்தை சீராக வைத்துக் கொள்ள தொடரும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று மாலை ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நடிகர் விவேக் தன்னுடைய சமூக வலைத்தளமான ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களை எண்ணி உருகி, அவர் பாடிய “மண்ணில் இந்த காதலின்றி” பாடலுக்கு டியூன் போட்டுள்ளார். மேலும் பிரார்த்தித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார் .