சென்னை: விஜயின் 27ஆண்டுகால நண்பரான மேலாளர், பிஆர்ஓ, டைரக்டர், தயாரிப்பாளர் என பலமுகங்கள் பி.டி.செல்வகுமார், விஜய் கட்சியில் இருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அத்துடன், மாற்று கட்சியினரை தங்களது கட்சிகளுக்கும் இழுக்கும் நடவடிக்கையும் தீவிரமடைந்துள்ளது. பல முக்கிய தலைவர்கள் கட்சி மாறி செல்வதும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. மேலும், பலரிடம் மறைமுக பேரங்கள் தொடர்கின்றன.
இந்த நிலையில், நடிகர் விஜயின் நண்பராகவும், சுமார் 27 ஆண்டுகளாக அவருக்கு மேலாளராக பணியாற்றிய டைரக்டர் பி.டி.செல்வகுமார், விஜய்மீதான அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
டைரக்டர் பி.டி.செல்வமாகுர், நடிகர் விஜயின் தந்தையான திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகருடன் இணைவதற்கு முன்பு ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், விஜய்யின் பத்திரிகை தொடர்பு அதிகாரியானார். 2003 ஆம் ஆண்டில், செல்வகுமார்திரைப்படத் தயாரிப்பில் இறங்கினார்,
அதைததொடர்ந்த, ஜனவரி 2012 இல், செல்வகுமார் தனது இயக்குநர் பயணத்தைத் தொடங்கினார், “ஒன்பதுல குரு” (2013) திரைப்படம் அக்டோபர் 2012 இல் படப்பிடிப்பு தொடங்கி 2013 தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியானது. பின்னர், 2014 ஆம் ஆண்டில், செல்வகுமார் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் “புலி” (2015) படத்தின் தயாரிப்பில் பணியாற்றத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, அவரது அடுத்த படமான “போக்கிரி ராஜா” (2016)விலும் பணியாற்றினார்.
இதைத்தொடர்ந்து, முதல்வர் பந்தா பரமசிவம், ‘ஒன்பதுல குரு’ ஆகிய படங்களை இயக்கியுள்ளதுடன், வசீகரா, மதுரை, போக்கிரி, வேல், சுறா, காவலன் ஆகிய படங்களுக்கு பிஆர்ஓவாக பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில், பி.டி.செல்வகுமார் தற்போது திமுகவில் இணைந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
பிடி செல்வகுமார், கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருந்து வரும் நிலையில், விஜயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சமீப காலமாக விஜய்யை விமர்சித்து பேட்டி அளித்த நிலையில், தற்போது திமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.
[youtube-feed feed=1]