சென்னை

டிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமானையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள வேட்டையன் என்ற இந்த படம் வரும் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதைத் தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

நேற்று நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட அசவுகரியம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ரஜினிகாந்துக்கு மருத்துவமனையில் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது.