டெல்லி: கல்வி உரிமைச் சட்டப்படி குழந்தைகள் கல்வி பெற ‘மதரஸா’ சரியான இடமல்ல என உச்சநீதி மன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.
மதரஸாக்கள் குழந்தைகள் “முறையான கல்வி” பெற “பொருத்தமற்ற” இடங்கள் மற்றும் அங்கு வழங்கப்படும் கல்வி “விரிவானது” மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளுக்கு எதிரானது என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சமீப காலமாக இஸ்லாமியர்களுக்கு என தனியாக செயல்பட்டு வரும் மதரசா பள்ளிகள் புற்றீசல் போல் தொடங்கப்பட்ட செயல்பட்டு வருகின்றன. ‘மதரஸா’ என்றால் அரபிப் பதம் என்று கூறப்படுகிறது. மதரஸா (مدرسه) என்றால் “கல்விக்கூடம்” என்று பொருள். மூலம் அரபி என்றாலும் உர்தூ, பார்ஸி, துருக்கி, குர்திஸ், இந்தோநேசியன், மலேசியன் ஆகிய மொழிகளிலும் கல்விக் கூடங்களுக்கு இச்சொல் பிரயோகிக்கப்படுகிறது. மற்ற மொழிகளில் சொல்லப்படும் பள்ளி,ஸ்கூல் ஆகியவற்றின் நேர்மொழியாக்கமே இது என்றும் விளக்கம் கொடுக்கினற்னர். . இதர மதங்களின் அல்லது மதங்களல்லாத கல்விக்கூடங்களுக்கு எப்படி பள்ளி/School என்று அழைக்கிறோமா, அதே அர்த்தம்தான் என அதை நடத்துபவர்கள கூறி வருகினற்னர்.
ஒரு மதரஸா என்பது ஒரு பிரத்தியேகமான இறையியல் இஸ்லாமிய செமினரி அல்லது ஒரு மதப் பள்ளி ஆகும், அங்கு குழந்தைகள் குர்ஆன், ஷரியா மற்றும் ஹதீஸின் கோட்பாடுகளில் தொடங்கப்படுகிறார்கள். முஸ்லீம் பெற்றோர்கள் மற்றும் மத அறிஞர்களுக்கு அவர்களின் குழந்தைகளுக்கு இஸ்லாம் மற்றும் அவர்களின் மத நம்பிக்கைகள் பற்றிய அறிவைப் பெறுவதே முதல் முன்னுரிமை. இது அவர்களின் மிக முக்கியமான மத மற்றும் கல்வி முன்னுரிமையாக கருதப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கு இஸ்லாமிய வரலாற்றையும் சிறப்புக் குறிப்புடன் இஸ்லாத்தின் வீரப் போர்வீரர்கள் கடந்த காலத்தில் செய்த வெற்றிகளை மட்டுமே கற்பிக்கிறார்கள். மேலும் இங்கு படிக்கும் குழந்தைகளின் மனதில் வெறுப்புணர்வே வளர்க்கப்படுகிறது. இதனால், மதஸா கல்வி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து உள்ளது. இந்த மதரஸாக்களில் பொதுவான கல்வி பயிற்றுவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மதரஸாக்களில், குழந்தைகளின் மனதில் மத ரீதியிலான கருத்துக்களே புகுத்தப்படுகின்றன என்று கூறப்படுகிறது. அதில் பயிலும் மாணவர்களையும் தீவிரவாதத்துடனும் தீவிரவாதிகளுடனும் இணைத்து பேசப்படுகிறது.
இந்த நிலையில், யோகி தலைமையிலான உத்தர பிரதேச அரசு, மதரஸா கல்வி வாரியச் சட்டம்-2004 அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதி மன்றமும், மதரஸா கல்வி வாரியச் சட்டம்-2004 அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என 2024 மாா்ச் மாதம் உறுதி செய்தது. மேலும், அங்கு மதரஸாக்களில் பயிலும் மாணவா்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், அலாகாபாத் உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சாா்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதன்படி,
மதரஸாக்களில் குழந்தைகளுக்கு முறையான, தரமான கல்வி உறுதி செய்யப்படுவதில்லை.
சரியான பள்ளிக் கல்வி முறையில் இல்லாத குழந்தைகள், மதிய உணவு, சீருடை உள்பட தொடக்கக் கல்விக்கான பல்வேறு உரிமைகளை இழக்கின்றனா்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) பாடத்திட்ட புத்தகங்கள் சிலவற்றை மட்டுமே கற்பிப்பதன் மூலம் மதரஸாக்களில் பெயரளவில்தான் கல்வி போதிக்கப்படுகிறது.
மதரஸா என்பது மாணவா்கள் முறையான கல்வி பெற பொருத்தமான இடமல்ல.
கடந்த 2009-ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டப் பிரிவுகள் 19, 21, 22, 23, 24, 25, 29-இன்கீழ் உள்ள உரிமைகளும் அவா்களுக்கு கிடைக்கப் பெறாத இடமே மதரஸாக்கள்.
மதரஸாக்களில் வழங்கப்படும் கல்வியானது, கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் விரிவானதாக இல்லை.
கல்விக்கு திருப்தியற்ற-நிறைவற்ற முன்மாதிரியாக மதரஸாக்கள் உள்ளன.
தரமான பாடத்திட்டமோ, செயல்பாடுகளோ இல்லாமல் அரசமைப்புச் சட்ட உறுதிமொழி, கல்வி உரிமைச் சட்டம், சிறாா் நீதிச் சட்டம் ஆகியவற்றுக்கு புறம்பாக தன்னிச்சையாக செயல்படுகின்றன.
கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஒரு பள்ளிக்கான வரையறைக்கு வெளியே மதரஸாக்கள் உள்ளதால், அங்கு பயிலும் குழந்தைகளுக்கு பள்ளி பாடத் திட்டத்தின்படி அடிப்படை அறிவை பெற முடியாமல் போய்விடுகிறது.
சமூக நிகழ்ச்சிகள், படிப்பு சாராத பிற பயிற்சிகள், அனுபவ கற்றலுக்கான சூழலை மாணவா்களுக்கு வழங்க மதரஸாக்கள் தவறிவிட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights) 2005 டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட குழந்தை உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தன்னாட்சி பெற்ற அரசு அமைப்பாகும். இது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பானது, 2007ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் செயல்படத் துவங்கியது.
ஐக்கிய நாட்டு சபையின் குழந்தைகள் உரிமைகள் மாநாடு மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள குழந்தைகளின் உரிமைகள் சட்டங்கள், கொள்கைகள், ஆட்சியமைப்புகள் ஆகியவை முறையாகப் பின்பற்றப்படுதலை உறுதிசெய்தல் இதன் குறிக்கோளாகும்[1]. 18 வயது வரையுள்ள அனைவரையும் குழந்தைகளாக இந்த ஆணையம் வரையறுக்கிறது.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களைத் தீர்க்க தனி குழுக்கள் அமைக்கப்பட வலியுறுத்துகிறது. இக்குழு குழந்தைகளுக்குத் தரப்படும் உடல் மற்றும் மன அளவிலான துன்புறுத்தல்களை விசாரித்து, 48 மணி நேரத்திற்குள் அவை பற்றி உள்ளூர் அல்லது மாவட்ட சட்ட அமைப்புகளில் புகார் செய்ய நடவடிக்கை எடுக்கிறது.