இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையைத் தொடர்ந்து கடந்த ஒருவார காலமாகவே பாலிவுட் திரையுலகில் பல சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்கிறது .
தற்போது நடிகர் அபய் தியோலும் விருது நிகழ்ச்சிகளில் காட்டிய பாரபட்சம் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
2011-ம் அண்டு ஜூலை மாதம் வெளியான படம் ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’. ஸோயா அக்தர் இயக்கியிருந்த இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து அபய் தியோல் இன்ஸ்டாகிராமில்
https://www.instagram.com/p/CBnOqrHJzZk/
” ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’ 2011-ம் ஆண்டு வெளியானது.(வாழ்க்கை இரண்டாம் முறை வாய்க்காது என்பதே தலைப்பின் அர்த்தம்).
அப்போது அனைத்து விருது வழங்கும் விழாக்களும் என்னையும், ஃபர்ஹானையும் ஒரு படி கீழே இறக்கி உறுதுணை நடிகர்கள் பிரிவில்தான் பரிந்துரை செய்தன.
நான் எந்த விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. ஆனால் ஃபர்ஹான் கலந்து கொண்டார்.
இதோடு #familyfareawards என்ற ஹேஷ்டேகையும் அபய் தியோல் சேர்த்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரன்வீர் ஷோரேவும், விருது வழங்கும் விழாக்கள் பற்றிக் கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார். ஒரு பிரபல வாரிசு நடிகர் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதாகவும், சிறந்த நடிகர்கள் பரிந்துரைப் பட்டியலில் அவரது பெயரே இருந்தது என்றும் ரன்வீர் நக்கலாகப் பகிர்ந்திருந்தார்.